உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
127 பார்வைகள்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில், மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்து மா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (17) காலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

‘ஆடிபிறப்பில் தமிழர் நாம் கூடி குதூகலித்து கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டதோடு, மன்னார் வலயக் கல்வி திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நவாலியூர் சோமசுந்தர புலவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அரசாங்க அதிபர் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய…

5 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை…

20 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சிறப்பு இறை பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு…

37 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

26 0 0