உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
134 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை(16) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் வீட்டைப் பொலிஸார் திடீரென முற்றுகையிட்ட போது, அவர் விற்பனைக்காக ‘ஐஸ்’ போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்த வேளை கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 4,400 மில்லிகிராம், கஞ்சா 30 கிராம், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 21,000 ரூபா, தராசு போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி, இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இகினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு இணங்க, மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த வெற்றிகரமான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0