உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
116 பார்வைகள்

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜனாதிபதியின் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்ட “மிக மோசமான தவறு” என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் கிய்வ் மற்றும் நாட்டின் ஏனைய நகரங்களில் இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீதிகளில் இறங்கிப்”ஃபெடோரோவை தொடாதே!”, “வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுக்ரைன் இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவ் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான அதிகாரப் போட்டியே இந்த பதவி நீக்கத்திற்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

ஃபெடோரோவுக்குப் பதிலாக, யுக்ரைன் பாதுகாப்புச் சேவையின் தற்காலிகத் தலைவரான மேஜர் ஜெனரல் யெவ்ஹேனி பிமாரா என்பவரை தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக ஸெலென்ஸ்கி நியமித்துள்ளார். இதற்கிடையில், யுக்ரைனின் புதிய பிரதமராக செர்ஜி முராவியெவ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0