உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது – ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
141 பார்வைகள்

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார்.

இதன்போது, ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், ”அடுத்த 3 நாட்களுக்கு அமெரிக்க இராணுவம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறது. அடுத்த வாரம் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது.

ஏனென்றால், அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், பாலங்களையும் தகர்த்துவிடுவோம்” என்று அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0