உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய இளைஞர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
156 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றைச் சம்மாந்துறைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸாரால் இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டியமை, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 முதல் 4 பேர் வரை பயணித்தமை, பிரதான வீதியை மறித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

காணொளியால் சிக்கிய கும்பல்
சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளியில், சம்மாந்துறைப் பகுதியில் சில இளைஞர்கள் எவ்வித வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாது, தலைக்கவசம் அணியாமல் ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் அமர்ந்து பயணித்துள்ளனர்.

அத்துடன், ஏனைய வாகனங்கள் செல்லும் பிரதான வீதியை மறித்து, ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.

இக்காணொளியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப் பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரதீப் குமார பொறுப்பேற்றதன் பின்னர், பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குமான தொடர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையானது, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி மேற்பார்வையில், போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விஜயவர்தன, குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமீர உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எவ்வித சமரசமும் இல்லை என்பதுடன் வீதிகளில் சாகசங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்துவோருக்கு எதிராகத் தயக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0