உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுக்குப் பயனளிக்கும் அனைத்து கடல் வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரான் எச்சரிக்கை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
118 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பயனளிக்கும் அனைத்து முக்கிய ஏற்றுமதி கடல் வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ எச்சரித்துள்ளது.

ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்கள் மீதான புதிய கடற்படை முற்றுகைக்கு உத்தரவிட்டார்.

இதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘IRNA’ இன்று வெளியிட்ட அறிக்கையில், இதனை கோரியுள்ளது.

அதன்படி, “இந்த பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதி என்பது ஒன்று அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும், அல்லது எவருக்கும் கிடைக்காமல் மறுக்கப்பட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த அறிவிப்பானது, உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் விநியோகத்தை முழுமையாக முடக்கும் ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் தனது நட்பு அமைப்பான ஏமனின் ‘ஹூதி’ (Houthi) கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி, செங்கடலின் நுழைவாயிலான ‘பாப் எல்-மண்டேப்’ (Bab el-Mandeb) ஜலசந்தியை மூடத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது நடந்தால், உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்தி விநியோகப் பாதைகளும் ஒரே நேரத்தில் முடக்கப்படும் அபாயம் ஏற்படும்.

சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது.

சவூதி அரேபியா ஏமன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூடத் தாங்கள் தயாராக இருப்பதாக ஹூதி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலராக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0