உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
158 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், முன்னைய காலங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்தப்பட்டு அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே குறித்த சில விவசாயிகளிடம் மாத்திரம் நெல் கொள்வனவு இடம்பெற்று வந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நெல் கொள்வனவையும் ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமன்றி நெல்லுக்கான உத்தரவாத விலையினையும் வழங்கி உள்ளதுடன் தனியார் ஒரு மூட்டை நெல்லினை 5500,620 ரூபாய்க்கும் தற்பொழுது இடைத்தரர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது. இருப்பினும் அரசாங்கம் கூறியவாறு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல் 8450 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகிறது.

குறித்த நெல் கொள்வனவு தொடர்ச்சியாக அனைத்து விவசாயிகளிடம் செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் உரிய நேரத்தில் நெல் கொள்வனவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

35 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

34 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

36 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

34 0 0