உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மோஜ்தபா கமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை – ட்ரம்ப் சூளுரை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
125 பார்வைகள்

ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்,

“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன , அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன எனவும் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனவும் தெரிவித்தார்.

ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் , அவரது மகன் மோஜ்தபா கமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் , மோஜ்தபா கமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று ட்ரம்ப் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0