உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
184 பார்வைகள்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர் காயமடைந்ததாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரை பொலிஸாரின் தகவலின்படி, கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள வண்டினகரம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்ச் சாலையில் புகுந்து, மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதலால் தனியார் பேருந்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது; அதேவேளையில், அரசுப் பேருந்து கவிழ்ந்தது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கொட்டாம்பட்டி காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு பேருந்துகளிலும் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணிகளைத் தொடங்கினர்.

விபத்தில் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைகள் உட்பட மொத்தம் 42 பேர் பலத்த காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கை மேலும் தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0