உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
53 பார்வைகள்

மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்.எஸ்.ஈர்ஜாட் அவர்களின் வழிகாட்டலில் பொது சுகாதார அதிகாரிகள், மவுஸ்சாகலை இராணுவ முகாம் அதிகாரி மற்றும் சிப்பாய்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவு அதிகாரி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரி புரவுண்லோ தோட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அரச நிறுவனங்கள் மற்றும் மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடக்கிய பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு நுளம்புகள் பெருகும் வகையில் இருந்த பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என்பவற்றுக்கு உடனடியாக டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் வகையில் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் வகையில் அடிக்கடி இவ்வாறான சோதனைகள் நடத்தப்பட்டு நுளம்புகள் பெருகும் வகையில் வைத்து இருப்போர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0