• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்க.!

Mathavi by Mathavi
July 10, 2026
in இலங்கை செய்திகள்
0
துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்க.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,046 மெற்றிக் தொன் அளவில் 2025ஆம் ஆண்டின் சிறுபோக நெல்லும், 4,172 மெற்றிக்தொன் அளவில் 2025/2026 பெரும்போக நெல்லும் களஞ்சியசாலைகளில் தேங்கி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள நெல்லை உடனடியாக அகற்றிவிட்டு, துரிதகதியில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக வவுனியா உள்ளிட்ட பிற மாவட்டங்களிலுள்ள களஞ்சியசாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, விரைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற குழு அறையில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

அந்தவகையில் அமைச்சர் லால்காந்தவின் தலைமையில், பிரதிஅமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தவகையில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக சிறுபோக நெற்கொள்வனவு தாமதமாகுவது தொடர்பில் சுட்டிக்காட்டி, எப்போது நெல் சந்தைப்படுத்தல் சபையால் நெற்கொள்வனவு மேள்கொள்ளப்படுமென்பதை கேட்டிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியும், மன்னார் மாவட்டத்தில் ஒருசில நாட்கள் பிந்திய நிலையும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை சார்ந்த அதிகாரியால் இதன்போது பதில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையே ஏற்படுமென இதன்போது நான் குறித்த அதிகாரியிடம் தெரிவித்திருந்தேன்.

ஏனெனில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் இதுவரை உரியவகையில் வெளியேற்றப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சியசாலைகளில் அதிகளவான நெல் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டின் சிறுபோக நெல் ஆறு களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 3,046 மெற்றிக் தொன் நெல் இவ்வாறு களஞ்சியசாலைகளில் தேக்கநிலையில் காணப்படுகின்றது.

இதுதவிர 2025/2026 பெரும்போக நெல் 16 களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. 4,172 மெற்றிக்தொன் நெல் இவ்வாறு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மெற்றிக் தொன் நெல் களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டு தரமிழந்து செல்கின்றது.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள களஞ்சியசாலைகள் அனைத்திலும் நெல் நிறைந்து காணப்படுகின்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருடைய முயற்சியால், களஞ்சியசாலைகள் வேறு திணைக்களங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு கடந்த பெரும்போக காலத்தில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லும் களஞ்சியசாலைகளில் இருந்து உரியவகையில் அப்புறப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது என்ற விடயத்தினைச் சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு களஞ்சியசாலைகளை நிறைத்து வைத்துக்கொண்டு எவ்வாறு எதிர்வரும் 13ஆம் திகதி சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்கப்போகின்றீர்கள் என இதன்போது கேள்வி எழுப்பியிருந்தேன்.

எனவே, களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உரியவகையில் அகற்றிவிட்டு, மிகவிரைவாக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறும் இதன்போது வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடக்கின்ற நெல்லை வாகனங்களின் மூலம் வவுனியா உள்ளிட்ட ஏனைய இடங்களில் காணப்படுகின்ற களஞ்சியசாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, சிறுபோக நெற்கொள்வனவு மேற்கோள்ளப்படுமென நெல்சந்தைப்படுத்தல் சபை அதிகாரி இதன்போது பதிலளித்தார்.

குறித்த செயற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு நான் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தேன்.

அத்தோடு நெல்லின் விலை நிர்ணயம் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

Related Posts

சிறைச்சாலை மோதலுக்குப்பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

சிறைச்சாலை மோதலுக்குப்
பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

by selvan
July 10, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்...

போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

by selvan
July 10, 2026
0

கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி...

சுரேஷ் சலேவின் ரிட் மனு ஜூலை 17 இற்கு ஒத்திவைப்பு

சுரேஷ் சலேவின் ரிட் மனு ஜூலை 17 இற்கு ஒத்திவைப்பு

by selvan
July 10, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின்...

அனுராதபுரம் வைத்தியசாலையில் கழிவகற்றலில் பாரிய மோசடி – சிவில் புலனாய்வு முன்னணி குற்றச்சாட்டு!

அனுராதபுரம் வைத்தியசாலையில் கழிவகற்றலில் பாரிய மோசடி – சிவில் புலனாய்வு முன்னணி குற்றச்சாட்டு!

by selvan
July 10, 2026
0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார...

‘நீதம்’ சட்ட இதழ் வெளியீடு.!

‘நீதம்’ சட்ட இதழ் வெளியீடு.!

by Mathavi
July 10, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் 'நீதம்' சட்ட இதழின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்....

மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசின் நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பி. கேள்வி.!

மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசின் நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பி. கேள்வி.!

by Mathavi
July 10, 2026
0

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்...

சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா.!

by Mathavi
July 10, 2026
0

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர். தாழ்வுபாடு பங்குத்தந்தை...

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09 தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தவேண்டுமானால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும்...

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

by Mathavi
July 10, 2026
0

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிஸாரின் பங்களிப்புடன்...

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

by Mathavi
July 10, 2026
0

மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி