உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவின் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து – குறைந்தது 28 பேர் பலி

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
53 பார்வைகள்

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் காணொளிகளின்படி, தீப்பற்றிய கட்டிடத்திலிருந்து பெரும் கரும்புகை வானை நோக்கி எழும்புவதையும், தொழிற்சாலையின் கூரை மீது சிக்கிக்கொண்ட பணியாளர்கள் சிலர் உதவி கோரி அலறுவதையும் காண முடிகிறது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தொழிற்சாலையின் உள்ளே இருந்த 200-க்கும் மேற்பட்டோரைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தத் துயரமான சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தத் தீ விபத்து பெருமளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பான அல்லது அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட ஜின்ஜியாங் நகரமானது சீனாவில் மட்டுமன்றி உலக அளவிலும் ‘காலணித் தலைநகரம்’ (Shoe Capital) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

தரவுகளின்படி, உலகின் ஒட்டுமொத்த காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% இந்த ஒரு நகரிலிருந்தே பெறப்படுகிறது. இங்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுதோறும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஜோடி காலணிகள் உலகச் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0