உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமைச்சர்கள் தமது துறை சார்ந்த இடங்களில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்! – முதல்வர் விஜய் அதிரடி

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்களால் சர்ச்சை ஏற்படுவதால், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் த.வெ.க.வினரை தாண்டி, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகிய கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, 2026, 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் விஜய்யும் ஒவ்வொரு நாளும், துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து, அத்துறைக்கு தேவையான என்னென்ன அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, அமைச்சர்கள் சிலர் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, பாடசாலை ஒன்றுக்கு சென்று ஆய்வு நடத்தி, கடைசி இருக்கை மாணவர்கள் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் விவாதப் பொருளானது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இது த.வெ.க. அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, இனி துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே அவர்களுடைய துறைகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேறு துறை பணிகளை ஆய்வு செய்ய செல்லக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். இது அமைச்சர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0