உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானில் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு ஈரானின் கடற்கரை பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளை மையம், அண்மைக்காலமாக ஈரானால் முன்னெடுக்கப்பட்ட ‘நியாயமற்ற ஆக்கிரமிப்பு’ நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டைப் பொறுப்புக்கூற வைக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

“முக்கிய சர்வதேச கடல்வழிப் பாதையில் சுதந்திரமாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக, அந்த நாட்டை அமெரிக்கா பொறுப்புக்கூற வைக்கிறது” என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சிறிக் (Sirik), புஷேர் (Bushehr), கொனாரக் (Konarak) மற்றும் சபாஹர் (Chabahar) ஆகிய இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றைத்தொடர்ந்து பிராந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிடாவிடில் எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி அந்த நாட்டை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவோம் என ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தமையும், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவமே, தற்போதைய இந்த தாக்குதலுக்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

86 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0