உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
55 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா வலிமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அந்த நீரிணையில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அமெரிக்காவின் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இதற்கு தெஹ்ரான் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

கெஷ்ம் தீவு, பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் சிதறிய உலோகத் துண்டுகளால் மக்கள் காயமடைந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குக் காரணமான அந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு, ஈரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

அந்த 60 சிறிய படகுகள் தவிர, ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் (Centcom) தெரிவித்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்த மேலதிக விவரங்களை அது வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதல்களுக்கு முன்பு, கடந்த மாதம் வொஷிங்டனும் தெஹ்ரானும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான எண்ணெய் தடைகளைத் தற்காலிகமாக நீக்கியிருந்த விலக்கை அமெரிக்க திறைசேரி இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0