உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
58 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் ரிசொர்ட் (Bürgenstock Resort) அல்லது இஸ்லாமாபாத் ஆகிய இரு இடங்களில் ஒன்றை இறுதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்பொழுது நடைபெறுவதால், இப்பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கமேனியின் உடல் வரும் 9-ஆம் திகதி அடக்கம் செய்யப்படவுள்ளது

இதன் காரணமாக, தலைநகர் தெஹ்ரானின் வான்பரப்பு இன்று முழுமையாக மூடப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, மெஹ்ராபாத் (Mehrabad) மற்றும் இமாம் கொமேனி ( Imam Khomeini ) சர்வதேச விமான நிலையங்களின் வழக்கமான விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வரும் 9-ஆம் திகதி இறுதி அடக்கச் சடங்கின் போது மஷாத் (Mashhad ) நகர வான்பரப்பும் மூடப்படவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகள் நடுவர்களாகச் செயல்படும் இப்பேச்சுவார்த்தையில், ஈரானின் அணுசக்தி திட்டம், தடைகள் விலக்கு மற்றும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0