உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
3 பார்வைகள்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தாரா? அல்லது தடுத்து வைக்கப்பட்ட வேளை பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு இடம் பெற்றதா? என பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தினகரன் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06)…

0 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை.!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள்…

1 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது.!

கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதான வீதியில்…

1 0 0
அம்பாறை செய்திகள்

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த…

0 0 0