உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இஸ்ரேலியப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர் சபியாவின் உயிருக்கு ஆபத்து!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
61 பார்வைகள்

குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி இஸ்ரேலியப் படையினரால் கடத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல பாலஸ்தீன மருத்துவர் ஹுசாம் அபு சபியாவின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளதாக அவரது மகன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

555 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பும் எச்சரித்துள்ளது.

வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் ஹுசாம் அபு சபியா, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சிறையொன்றின் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர், அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவரது மகன் எலியாஸ் அபு சபியா வெளியிட்ட காணொளிப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

தமது தந்தையால் சரியாக சுவாசிக்கவோ, பேசவோ முடியவில்லை. எருசலேமில் நடைபெற்ற கடந்த நீதிமன்ற அமர்வுக்குப் பின்னர், சிறைக்குள் அவர் எதிர்கொண்ட சித்திரவதைகள், வலி மற்றும் இரத்தக் கறைகளால் அவரது முகம் சிதைந்து போயிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் 27 அன்று, வடக்கு காசாவின் சுகாதாரக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை இஸ்ரேலியப் படையினர் தீவிரப்படுத்தியபோது, பணியில் இருந்த அபு சபியா கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் அபு சபியா மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யவில்லை. பாலஸ்தீனர்களை விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் “சட்டவிரோதப் போராளி” என்ற பிரிவின் கீழ் அவர் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பாலஸ்தீன மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

74 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0