உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
125 பார்வைகள்

கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (4) இடம்பெற்றது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லிகிராம் உட்பட சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், வங்கி அட்டைகள், சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் சான்றுப்பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அதிகாலை 3 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை மையப்படுத்தி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொலிஸார் சென்றிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டின் அருகில் இருந்து திடீரென கார் ஒன்றில் இருவர் தப்பிசென்றதுடன் தப்பிச் சென்றவர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரத்திச் சென்றனர். இவ்வாறு துரத்திச் சென்ற போது மற்றொரு சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் தப்பி சென்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார். இதனை அவதானித்த அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் அச்சந்தேக நபரை கைது செய்ததுடன் தப்பி சென்ற காரை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மறித்து தடுத்து நிறுத்தினர்.

இதன்போது மங்காத்தா திரைப்பட பாணியில் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பி சென்ற காரை தலைக்கவசத்தினால் எறிந்து தடுத்து நிறுத்தி காரில் இருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இரகசிய தகவலுக்கமைய ஏற்கனவே சோதனை மேற்கொண்ட வீட்டில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் வருகை தருவதற்கு முன்னர் கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் பல பகுதிகளிலும் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்த இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு தரப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்(SDIG) சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG ) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் (IP) ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த மாதமும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கருகாமையில் கடவுளின் பிள்ளை என அழைக்கப்படும் 23 வயதுடைய பெண் சந்தேக நபரும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இக் கைது நடவடிக்கைக்கு அந்த ஊர் மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

147 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

136 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0