உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தாய்லாந்தில் கெப் ரக வாகனம் மோதி எட்டு தேரர்கள் பலி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
73 பார்வைகள்

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

முவெங் (Mueang) மாவட்டத்தின் பான் நா சி நுவான் (Ban Na Si Nuan) பகுதியில் இன்று (02) நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த உடனேயே விரைந்து செயற்பட்ட பொலிஸாரும் நிவாரணக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, விபத்தின் காரணமாக பல தேரர்கள் வீதியோரமாக விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஐந்து தேரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த ஏனைய 13 தேரர்களும் தற்போது அவசரமாக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டியை 11 வயது சிறுவன் ஒருவனே செலுத்தியுள்ளார்.

அவர் தனது பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் எந்தவொரு அனுமதியும் இன்றி இந்த வாகனத்தை செலுத்திச் சென்று, இந்த பாரதூரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தாய்லாந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

74 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0