உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உக்ரைனியர் மீது ஜேர்மனி வழக்குப் பதிவு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
49 பார்வைகள்


நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளது.

உக்ரைன்–ரஷ்யா போர் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்டிக் கடலுக்கடியில் அமைந்திருந்த நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயை தகர்க்கும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறப்படும் 7 பேர் கொண்ட குழுவை வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜேர்மனியின் முன்னணி ஊடகங்களான ARD மற்றும் Zeit உறுதிப்படுத்தியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 50 வயதுடைய செர்ஹி K. என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்ஹி K. கடந்த 2025 ஆம் ஆண்டு இத்தாலியில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் முக்கிய கடலடி உள்கட்டமைப்பாகும்.

இந்த அமைப்பிலிருந்த நான்கு குழாய்களில் மூன்று, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வெடிப்பில் சேதமடைந்தன. அந்த நேரத்தில் அவை செயற்பாட்டில் இல்லாவிட்டாலும், ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் கட்டமைப்பாக அவை கருதப்படுகின்றன.

இதனிடையே, இந்த வெடிப்பு சம்பவத்துடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று செர்ஹி K. மறுத்துள்ளார்.

மேலும், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் நீதிமன்றத்தில் நிலைக்காது என்றும், இந்த வழக்கிலிருந்து தனது வாடிக்கையாளர் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

74 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0