உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறையில் பொசன் திருவிழா.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
90 பார்வைகள்

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன.

அம்பாறை நகரின் பிரதான தோரணத்தை அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, இலங்கை இராணுவத்தின் 24-வது படைப்பிரிவின் (Division) தளபதி மேஜர் ஜெனரல் திலுப பண்டார, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.

மகா சங்கத்தினரான, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கநாயக்க கிரிந்திவெல சோமரத்ன தேரர், அமரபுர மகா நிகாயவின் பிரதம சங்க நாயக்க கிரிதலே குணானந்த தேரர், அம்பாறை – மட்டக்களப்பு இரு மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும், கினியாகல உத்தர ஜயமஹ விகாரையின் விகாராதிபதியுமான இங்கினியாகல சிறிதம்ம தேரர் மற்றும் அம்பாறை நகர மகா விகாரையின் விகாராதிபதி சுஹுதகம சீலரத்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ‘சேத் பிரித்’ பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பல்லின மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு முக்கிய ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக இந்த பொசன் வலயத் தோரணக் கண்காட்சி அமைகிறது. இந்த ஆண்டு பொசன் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, அம்பாறை பொசன் வலயக் குழுவினர் அம்பாறை நகரில் 5 பிரம்மாண்டமான தோரணப் பந்தல்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0