உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மாறுபட்ட கருத்துக்கள்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
42 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தரப்பு சந்திப்பொன்றை கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கட்டார் தலைநகர் டோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்புக்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தக் கூற்றுக்கு முரணாக, ஈரானின் வெளியுறவுத் துணை அமைச்சர் காசெம் கரீபாபாதி (Kazem Gharibabadi), இந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி தொழில்நுட்ப மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான எந்தத் திட்டமும் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், ட்ரம்பின் கருத்துக்கும் ஈரான் தரப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

81 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

80 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0