உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்த புதுப்பாலம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
54 பார்வைகள்

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று மாலை உடைந்து வீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை எனும் காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்தமையால் எந்த இழப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இப்பாலத்தின் வீதிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாவிக்கும் இந்த வீதியினை தினமும் பெருமளவான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் காவுவண்டிகளும் இந்த வீதியினை கூடுதலாக பாவித்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த பாலம் இடிந்து வீழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம் குறித்த இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை ஆணையாளர் குறித்த பகுதியின் நிலைமைகளை பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு நகருக்குள் இரண்டு பிரதான பாலங்கள் ஊடாக நுழைய முடியும் இந்நிலையில் ஒரு பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக ஒரு பாலத்தினை பயன்படுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0