உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
79 பார்வைகள்

வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 68,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவத்தில், வெனிசுவேலாவின் ‘கிளப் ஸ்போர்ட் மரிடிமோ டி லா குவைரா’ (Club Sport Marítimo de La Guaira) கால்பந்து கிளப்பில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி யானினா மரணெல்லா மற்றும் அவர்களது பிள்ளைகளான ஆரோன் மற்றும் ஐன்ஹோவா ஆகியோர் நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.

அவர்களைக் கண்டறிய கடந்த 74 மணிநேரமாகத் தீவிர தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வந்தது.

இறுதியில், மூவரின் உடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை ட்ரெஜோவின் நண்பரும் கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தினார்.

மேலும், துயரமான இந்த நேரத்தில் ட்ரெஜோவின் குடும்பத்தினருக்குத் தேவையான மரியாதையையும், ஆதரவையும் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

80 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

80 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0