உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பக்தாத் பயணத்தின் போது கருத்துத் தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்சி, ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

அமெரிக்காவுடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்திற்கு முன்பாக, பேச்சுவார்த்தை நடைபெறும் அடுத்த 60 நாட்களுக்கு, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதை உறுதிசெய்யும் பொறுப்பு ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 60 நாட்களுக்குள், ஈரானின் ஒருங்கிணைப்பு இன்றி எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக மற்றொரு பாதையை உருவாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதில் ஓமானுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது.

இந்த நிர்வாகம் நிரந்தரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள ஒப்பந்தத்தின்படி, பேச்சுவார்த்தை காலத்தின் முழுப் பொறுப்பும் மற்றும் நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனி உரிமையும் ஈரானுக்கே உண்டு என்று ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

81 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

80 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0