உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
95 பார்வைகள்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1953 ஜனவரி 7-ஆம் திகதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் 1979 ஆம் ஆண்டு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இன்று போய் நாளை வா’, ‘சின்ன வீடு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி நடித்த அவர், குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

68 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

93 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

79 0 0