உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
92 பார்வைகள்

அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய திட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அரண்மனையின் மின்சாரம், நீர்வழங்கல், வெப்பமூட்டும் அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

எனினும், இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் பக்கிங்காம் அரண்மனையில் நிரந்தரமாக குடியேற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலாக, அவர் தற்போது வசித்து வரும் கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரச நிகழ்வுகள், வெளிநாட்டு தலைவர்களை வரவேற்பது மற்றும் முக்கிய அரச மரியாதை நிகழ்ச்சிகளுக்காக பக்கிங்காம் அரண்மனை தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

அரச குடும்பத்தின் ஆண்டு நிதி அறிக்கையில், மன்னர் சார்ல்ஸ் செலுத்திய தனிப்பட்ட வருமான வரி, அரச குடும்ப உறுப்பினர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு நிதி விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அரச செலவினங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

இதற்கிடையில், அரண்மனை புதுப்பிப்பு செலவு அதிகரித்திருப்பது குறித்து பிரித்தானியாவில் அரச செலவுகள் தொடர்பாக மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஒருபுறம்,  நாட்டின் பாரம்பரிய சின்னத்தை பாதுகாக்க இந்த முதலீடு அவசியம் என சிலர் வலியுறுத்தும் நிலையில்,  மறுபுறம் பொருளாதார சவால்கள் நிலவும் காலத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

145 0 0