உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
57 பார்வைகள்

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார்.

அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் ஆய்வு செய்தார்.

அப்போது, அந்த பெண் கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்தது தெரியவந்தது.

தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பெண் போல் இந்திய கடவுச்சீட்டு மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

அதை தொடர்ந்து வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் அந்த பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்திய போது, அவர் இலங்கையை சேர்ந்த 58 வயதான மெரினா ஆனி என்றும், கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்ததும், அதன் பிறகு குவைத் சென்று பின்னர் 2003ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியா வந்து விருதுநகரில் குடியேரியதும் தெரியவந்தது.

பின்னர் மெரினா ஆனி தான் இந்திய குடியுரிமை பெண் போல் இந்திய ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று, தன்னை இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்று சொந்த நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0