உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆப்கானிஸ்தானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஆப்கானிஸ்தானில், நீதிபதிகள் உட்பட இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துவதற்குதலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஜூன் 16 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய இராணுவ நீதிமன்ற உத்தரவை மீறி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஊழியர்களின் கையடக்க தொலைபேசிகள் பொதுவெளியில் உடைத்து நொறுக்கப்படும் என்றும், அவர்கள் கடுமையான சட்டப் பூர்வ தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசுத் துறைகளில் பெரும்பாலான கோப்பு பரிமாற்றங்கள், அறிவிப்புகள் வட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மின்னஞ்சல் மூலம் கையாளப்பட்டு வந்ததால், இந்த திடீர் ஸ்மார்ட்போன் தடையால் பல மாகாணங்களின் நிர்வாக நடைமுறைகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் கல்வி மற்றும் ஊடக சுதந்திரம் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாகவே, மக்களின் தகவல் தொடர்பு சுதந்திரத்தை முடக்கும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0