உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மெட்டவின் புதிய AI தொழில்நுட்பக்  கண்ணாடி அறிமுகம்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
42 பார்வைகள்

சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரே-பேன் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி, பயனர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுற்றுப்புறத்தில் காணப்படும் பொருட்கள் மற்றும் இடங்களை அடையாளம் காணுதல், தகவல்களை வழங்குதல், மொழிபெயர்ப்பு சேவைகள், புகைப்படம் மற்றும் காணொளி பதிவு போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பயனர்கள் கண்ணாடியை அணிந்தபடியே குரல் கட்டளைகள் மூலம் பல்வேறு தகவல்களைப் பெறுவதுடன், அன்றாட பணிகளை எளிதாக மேற்கொள்ளவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த AI ஸ்மார்ட் கண்ணாடியின் ஆரம்ப விலை 299 அமெரிக்க டொலர்கள் (சுமார் 28,300 இலங்கை ரூபாய்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மேலும் நெருக்கமாக இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0