உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் அளித்துள்ள தகவல்கள் பொய்யாக இருந்தால் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வரும் – டிரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
65 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் ஈரான் எந்தவிதமான கட்டணங்களையோ, காப்பீட்டு செலவுகளையோ அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையோ கோரவோ அல்லது பெறவோ இல்லை என்று ஈரான் தன்னிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரான் அளித்துள்ள இந்தத் தகவல் பொய்யானது என்று தெரியவந்தால், பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் வழங்கவில்லை அல்லது அவர்களது முடக்கப்பட்ட பணத்தை விடுவிக்கவில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் பணத்தைக் கொண்டு, அமெரிக்க விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களிடமிருந்து சோளம், கோதுமை, சோயா உள்ளிட்ட தானியங்களை வாங்கப் போவதாகவும், ஈரானுக்குத் தேவையான உணவை அமெரிக்காவிலிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0