உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
65 பார்வைகள்

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும் மடு திருத்தலத்தின் நிர்வாகம் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

மடு அன்னையின் திருத்தலத்தின் போட்டிக்கோ முன்றலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்பணியாளர்கள், அருட் சகோதர சகோதரிகள், இறைமக்கள் அடங்கலாக இறை வழிபாட்டோடு முதலாவது நவநாள் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதலாவது நவ நாள் வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வாக மருதமடு திரு தாயாரின் கொடி மற்றும் பாப்பரசரின் திருக்கொடிகள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களினால் இறைவார்த்தை பகிர்வோடு ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள், திருச்செபமாலைகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் நடாத்தப்பட்டு வழமையின் பிரகாரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னம் எழுந்தேற்றம் செய்யப்பட்டு தமிழ் சிங்கள மொழிகளில் மறையுரைகள் வழங்கப்பட்டன.

மறையுரையினை தொடர்ந்து தேவ அழைத்தலுக்கான ஜெபம் இரு மொழிகளிலும் பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக நற்கருணை இறையாசீர் ஆனது இறைமக்களுக்கு வழங்கப்பட்டு இரவு செபத்துடன் முதலாவது நாள் வழிபாடுகள் முடிவுற்றது.

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 2 ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் பக்திபூர்வமாக நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0