உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கட்டாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு சம்பவம்; பலர் காயம்.!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (22) ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்பு கட்டாரின் ராஸ் லஃபான் தொழிற்துறை நகரில் அமைந்துள்ள ‘பர்சான்’ தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக கட்டார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறே இந்த வெடிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெடிப்பின் பின்னர் ஆலைக்கு வெளியே நச்சு வாயு அல்லது எரிவாயுக் கசிவு ஏற்படவில்லை என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிற்துறை மையத்தை நிர்வகிக்கும் கத்தார் எனர்ஜி நிறுவனம் அவசர மீட்புப் பணிகளை முன்னெடுத்து ஆலையில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0