உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
56 பார்வைகள்

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (22) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த இராணுவ சிப்பாய் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றும் ஜெயதிலக்க (வயது- 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, அங்கு கடமையில் உள்ள இராணுவ சிப்பாய்களுக்கு பொறுப்பாக இருந்து கடமைக்கான துப்பாக்கிகளை விநியோகித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராணுவ சிப்பாய்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து விநியோகிக்க முற்பட்ட போது குறித்த துப்பாக்கி இயங்கிய நிலையில் அவர் காயமடைந்து உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்து இராணுவ சிப்பாயின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0