உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
59 பார்வைகள்

பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

பாடசாலை வழமைபோல் இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை.

அந்த பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0