உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
111 பார்வைகள்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், கடந்த வியாழக்கிழமை மாலை 4.50 மணியளவில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யுத்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இந்த ஆயுதப் பாகங்கள், கொம்பன்குளம் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள சிறிய இரும்புத் தகடு ஒன்றினால் மூடப்பட்ட குழிக்குள், பெரிய பீப்பாயொன்றில் உரப்பையினுள் இட்டுப் புதைக்கப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீண்டகாலமாக நிலத்தின்கீழ் இருந்தமையால் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் இருவேறு பிரிவுகளாகக் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள்
  • ரி – 56 ரக தோட்டாக்கள் – 08
  • பிஸ்ரல் தோட்டாப் பைகள் – 03
  • பிஸ்ரல் உறை – 01
  • பிஸ்டல் தோட்டாக்கூடு – 01
  • கிளைமோர் கம்பி – 02 ரோல்கள் (தலா 15 மீற்றர் வீதம் மொத்தம் 30 மீற்றர்)
  • கிளைமோர் மின்கலங்கள் – 04
  • உரப்பை – 01
  1. பாதுகாப்பு காரணங்களுக்காகக் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளவை.
  • கிளைமோர் குண்டு – 01 (சுமார் 2.5 கிலோ எடை கொண்ட பழுப்பு நிறக் குண்டு)
  • மிதிவெடிகள் – 02

மீட்கப்பட்ட ஆபத்தான கிளைமோர் குண்டு மற்றும் மிதிவெடிகள் என்பன குச்சவெளி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதனைச் செயலிழக்கச் செய்வதற்கான உரிய உத்தரவுகள் பெறப்படும் வரை, பாதுகாப்பு காரணங்களுக்காகக் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் குச்சவெளி பொலிஸாரும் இணைந்து, இந்த ஆயுதங்களை மறைத்து வைத்த நபர்கள் யார் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0