உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
58 பார்வைகள்

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் அனுமன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் என்பதால், இக்கோயிலிலும் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கோயிலின் கருவறைக்கு முன்பாக பக்தர்களின் வசதிக்காகப் புதிய வளாகம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான கான்கிரீட் மேற்கூரை அண்மையில்தான் போடப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்களில் சிலர், புதிய கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரங்களுக்கு இடையே நின்று கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக இரும்புச் சாரங்கள் மொத்தமாகச் சரிந்து விழுந்தன.

அதன் தாக்கத்தினால், புதிதாகப் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட கான்கிரீட் மேற்கூரையும் இடிந்து பக்தர்கள் மீது விழுந்து நொறுங்கியது.

மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் கான்கிரீட் இடிபாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கி காயமடைந்தனர்.

படுகாயமடைந்த 30 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, காயமடைந்தவர்களில் 6 பக்தர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0