உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது –  ட்ரம்ப் அறிவிப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
47 பார்வைகள்

லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த 60 நாட்கள் போர்நிறுத்தக் காலம் முடிந்த பின்னரும் கூட ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒருவேளை இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் முழுமையடையத் தவறினால், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் ‘காவல் தூதனாக’ அமெரிக்கா ஆற்றிய, ஆற்றுகின்ற மற்றும் ஆற்றப்போகின்ற சேவைகளுக்கான செலவினங்களை ஈடுசெய்யும் பொருட்டு, அமெரிக்காவினால் அல்லது அமெரிக்காவிற்காக மட்டுமே எதிர்காலத்தில் அங்கு கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்திருந்த பின்னணியில், அங்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும் ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சர்வதேச ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0