உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 10இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
45 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட 10 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

லெபனானில் மோதல்கள் நிறுத்தப்படுவது, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்கா – ஈரான் இடையே 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்கான முதன்மை நிபந்தனையாகும்.

அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக அமெரிக்க மற்றும் ஹிஸ்புல்லா தரப்புகள் உறுதிப்படுத்தியிருந்தன.

எனினும், போர்நிறுத்தம் அமுலாகிய இரவோடு இரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்கள் படைகள் மீது 50 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகவும், அதற்குப் பதிலடியாகவே ஹிஸ்புல்லாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானில் பொதுமக்கள் எவரையும் காயப்படுத்துவது தங்கள் நோக்கமல்ல என்றும், எல்லையோர அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காகவே லெபனான் நிலப்பரப்பின் 5% பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், லெபனான் மண்ணில் இஸ்ரேல் படைகள் சுதந்திரமாக நடமாடுவதையோ அல்லது மார்ச் 2 ஆம் திகதிக்கு முந்தைய நிலவரத்துக்கு நாடு திரும்புவதையோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லெபனானின் தெற்குப் பகுதி மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் நடத்திய இந்தத் தாக்குதல்களில், டயர் (Tyre) மாவட்டத்தின் பாரிஷ் (Barish) நகரில் உள்ள மூன்று அடுக்கு குடியிருப்பு கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கஃபர்ருமான் – நபடியே (Kfarrumman-Nabatieh) வீதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை மருத்துவப் பணியாளர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 3,912 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0