உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை நீக்கியது அமெரிக்கா!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கையொன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

“ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க” இந்த முற்றுகை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் சில அமெரிக்க போர்க்கப்பல்கள் இன்னும் “பொதுவான பிராந்திய பகுதியில்” தரித்திருக்கும் என்றும் அந்த கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தனக்கு “வேறுபட்ட கருத்து” இருந்தபோதிலும், அமெரிக்காவுடனான இந்த உடன்படிக்கைக்கு தான் ஒப்புதல் அளித்துள்ளதாக ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த வேறுபட்ட கருத்து என்ன என்பதை அவர் வெளியிடவில்லை.

இருந்தபோதும், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், “ஈரானிய தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பார்” என அளித்த உறுதியின் பின்னரே இதற்கு அனுமதி வழங்கியதாக உச்சத் தலைவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி டிரம்ப் “நம்பிக்கையற்ற நிலையில், இந்த உடன்படிக்கையைக் கொண்டுவர அனைத்து வகையான செல்வாக்குகளையும் பயன்படுத்தினார்” என்றும் கமேனி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தெஹ்ரானுக்கும் வோஷிங்டனுக்கும் இடையே “நேரடி பேச்சுவார்த்தைகள்” இடம்பெறும் என்றாலும், அது “எதிரியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படாது” என்றும் உச்ச தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி பிராந்திய போரைத் தூண்டிய அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் அவரது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் மொஜ்தபா கமேனி பதவியேற்றார்.

பதவியேற்ற பின்னர் அவர் பகிரங்கமாகத் தோன்றாத நிலையில், இந்த உடன்படிக்கை குறித்து அவர் கருத்து வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

உச்ச தலைவர் கமேனியின் அறிக்கைக்கு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான மோதல்கள் உட்பட “அனைத்து முனைகளிலும்” போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0