தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18) ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது.
கடந்த மே 10 ஆம் திகதி நடைபெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசை தொடர்பாகப் பெரும் அரசியல் சர்ச்சை எழுந்த ஒரு மாத காலத்திற்குப் பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்டது.
அதேவேளையில், பல தசாப்தங்களாக மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி தேசிய கீதம் பின்னர் இசைக்கப்பட்டது.