உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
66 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு  தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “ஈரானின் உறுதியான நிலைப்பாடு ஒரு மூலோபாய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன் காரணமாகவே அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தது.

தற்போது, லெபனானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும், இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்தையும் முழுமையாகப் பின்பற்றுவதன் மூலமும் வொஷிங்டன் தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்.

ஈரானியர்களுக்கு எதிராகத் தன்னிச்சையான திணிப்புகளைச் செய்யும் காலம் இனி முடிந்துவிட்டது” என்று இப்ராஹிம் அசிசி குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0