உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
48 பார்வைகள்

ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் ஒன்று, சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.

நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து, செங்குத்தாகத் தலைகீழாகத் தரையில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்து அங்காரா நதிக்கு அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடந்ததாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

விமானம் தரையில் மோதுவதற்கு சில நொடிகள் முன்பாக, அதில் இருந்த 4 ராணுவ வீரர்களும் தங்களின் அவசரகால இருக்கை தொழில்நுட்பம் மூலம் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பினர்.

அவர்களின் உயிருக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0