உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய சுற்றுவட்டத்திற்கு முன் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், திணைக்கள தலைவர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

இதன்போது மக்கள் கலந்து கொண்டு உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்தனர்.

மேலும் தொழில் சந்தை இடம்பெற்றது. இதில் பல்வேறு தொழில் வழங்குனர்கள் கலந்து கொண்டதோடு, வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்ற இளைஞர், யுவதிகள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு, விண்ணப்பங்களையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0