உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
67 பார்வைகள்

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர இயலாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகியிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணியில் தொடர்வதாகவும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தன.

எனினும், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்திருப்பது தமிழக அரசியல் தரப்புக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு, எதிர்வரும் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி சமன்பாடுகள் தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0