உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை! – ஈரான் அறிவிப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
51 பார்வைகள்

அமெரிக்காவுடனான சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளில் தனது “சிவப்பு கோடுகளை” (Red Lines) ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது.

உடன்படிக்கை கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் குறித்து வௌியாகும் தகவல்கள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே என்றும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை உரையின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்ட போதிலும், பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து பலமுறை மாற்றிக் கொண்டதே தற்போதைய இழுபறிக்கு முக்கிய காரணம் என்று இஸ்மாயில் பாகேய் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர் நிறுத்தம் மற்றும் உடன்படிக்கை குறித்துப் பேசி வரும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ மறுப்பு வௌியாகியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0