உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
57 பார்வைகள்

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்புப் பதற்றத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய தினம் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஈரானிய தாக்குதல்களின் பின்னணியில், பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியது.

அத்துடன் நாட்டின் பிரதான சர்வதேச வானூர்தி நிலையத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டதையடுத்து, வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், வானூர்தி நிலைய நடவடிக்கைகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தாமதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டிருந்த பல வானூர்தி சேவைகள் மீளத் தொடங்கப்பட்டுள்ளன.

பயணிகள் வானூர்தி நேர அட்டவணைகள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட வானூர்தி சேவைகளிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, குவைத் பாதுகாப்பு மற்றும் வானூர்திப் போக்குவரத்து அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0