உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
51 பார்வைகள்

டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவகப் பகுதியில் திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து அங்கிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0