உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய குடியரசுத் தலைவருக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையில் சந்திப்பு.

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த உயர்மட்டச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டமைப்பு, மாநிலத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், இரண்டாவது முறையாக டெல்லிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு மலர்க்கொத்து வழங்கி கௌரவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0